எங்களைப் பற்றி
குறைவான விலையில் உடனடியாக வீடுகட்டி குடியேற விழையும் மக்களுக்கா.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையின் வழிகாட்டுதல்களின்படி நில விற்பன்னராக தன் தொழிலை துவக்கிய திரு.மார்ட்டின் செல்லையா அவர்களால் கடந்த 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட எமது BEST PROMOTERS நிறுவனமானது தங்கள் சொந்த நிலங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது
மேலும், திரு.மார்ட்டின் செல்லையா அவர்களின் உண்மை, நேர்மை, கடின உழைப்பு காரணமாக இன்றுவரை சுமார் 2 ஆயிரத்தி 300க்கும் அதிகமான மனைகளை விற்பனை செய்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நம்பிக்கையை வென்றெடுத்து இத்தொழிலில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துள்ளது எமது BEST PROMOTERS நிறுவனம்.
நோக்கம்
பெருகி வரும் மக்கள் தொகை, அருகி வரும் இயற்கை வளங்கள் இவற்றை கருத்தில் கொண்டு பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகருக்கு மிக அருகில் மாசற்ற காற்று, குறைவான ஆழத்தில் செறிவான குடிநீர், மேடான புவியமைப்பு, மாறாத சுற்றுச்சூழல் கொண்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து அரசு வழிகாட்டியபடி அகலமான சாலைகள், எதிர்கால தேவைகளுக்கான இடவசதிகளை ஏற்படுத்தி, குறைவான விலையில் உடனடியாக வீடுகட்டி குடியேற விழையும் மக்களுக்காகவும், கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்காக ‘விரும்பிய நேரத்தில் உடனடி மறுவிற்பனை’ என்பதை மனதில் கொண்டு முதலீடு செய்ய விரும்பும் அனைவருக்காகவும் மிக சரியான விலையில், ‘அனைவருக்கும் வீட்டுமனை’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுவது.
விற்பனைக்கு பின்பும் கூட அவ்வப்போது மனையை பார்வையிட்டு பராமரிப்பது..!
எங்களின் சாதனைகள்
முதல் 5 ஆண்டுகளில்...
-
தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள தென் சென்னைக்கு உட்பட்ட கண்டிகை, படப்பை, வல்லக்கோட்டை, காயார் பகுதிகளில் 4 நகரிய வீட்டு மனைகளை (TOWNSHIP) உருவாக்கி விரைவாக விற்பனை செய்து, எம்மிடம் வீட்டுமனைகள் வாங்கிய அனைவரிடமும் இன்றுவரை நல்லுறவை தொடர்வது.
இரண்டாம் 5 ஆண்டுகளில்...
-
தமிழ்நாட்டின் மையப்படுதியான திருச்சி சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள சோழமாதேவி, நாகமங்களம், சூரியூர் உள்ளிட்ட 6 பகுதிகளில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்தது.
-
அவற்றில் பல வீட்டுமனைகளை உரிமையாளர்களின் தேவைகேற்ப அவர்கள் வாங்கிய விலையை விட பல மடங்கு அதிக விலையில், வெளிப்படையான முறையில் நாங்களே மறுவிற்பனை செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்றது - தொடர்ந்து பெற்று வருவது!
மூன்றாம் 5 ஆண்டுகளில்...
-
தென் சென்னைக்குட்பட்ட மடிப்பாக்கம் பாலாஜி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது.
-
சென்னையில் நடிகர் ரஜினி காந்த் வீடு அருகில் அமைந்துள்ள மதுரா நகரில் ( கேளம்பாக்கம் ) 10 ‘வில்லா மாடல்’ குடியிருப்புகள் உருவாக்கியது.
-
குளுகுளு கொடைக்கானலில் உள்ள பள்ளங்கி கிராமத்தில் 3 ஏக்கரில் வீட்டு மனைப் பிரிவுகளை உருவாக்கி, இன்று வரை தொடர்ச்சியாக அதை விற்பனையும், விரிவாக்கமும் செய்து வருவது.
தற்போது...
-
திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீட்டரில், பைபாஸ் சாலையிலிருந்து 1 கி.மீட்டருக்கும் குறைவான தூரத்தில், கல்லூரிகளுக்கும் அரசுப் பணியாளர்கள் அதிகம் வசிக்கும் கொணலை ஊருக்கும் நடுவில், விரைவில் துவங்கவிருக்கும் மிகப்பெரிய தனியார் மென்பொருள் பூங்காவிற்கு எதிரில் அமைந்துள்ள எமது SSM CITY மனைப்பிரிவின் PHASE – 3 & 5 விரிவாக்கம் மற்றும் விற்பனை.
-
திருச்சி சமயபுரம் மாடக்குறிச்சி கிராமத்தில் போக்குவரத்து நகரையொட்டி உடனடியாக குடியேறக் கூடிய வகையில் அமைந்துள்ள எமது RAINBOW GARDEN வீட்டுமனைகள் விற்பனை.
திட்டங்கள்
தற்போதைய திட்டங்கள் பற்றி மேலும் அறிய



